10, 000 கி.மீ தொலைவிற்கு எரிவாயு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது- குடியரசுத் தலைவர்..!
நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ” மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீரமைப்பு, செயல்பாடு மாற்றியமைத்தல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பான அடித்தளத்தை இந்தியா அமைந்துள்ளது. மத்திய அரசு சிறப்பான முறையில் மிகவும் வெளிப்படையாக செயல்படுகிறது. இந்தியாவின் ஆயுத தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. செல்போன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.