ஜனவரியில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விற்பனை! ஏன் தெரியுமா?
இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் பெட்ரோல் நுகர்வு சுமார் 9.3% உயர்ந்து இருக்கிறது மற்றும் டீசல் விற்பனை சுமார் 3.1% உயர்ந்துள்ளது.
இந்த தகவலை Oil Ministry-யின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலைசிஸ் செல் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் டீசல் விற்பனை கடந்த மாதம் 3.1 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டிசம்பரில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் மந்தமான விற்பனை காணப்பட்ட நிலையில், 2024 ஜனவரியில் இரு எரிபொருட்களின் விற்பனையும் புதிய ஆண்டில் கணிசமாக அதிகரித்து உள்ளது.
டிசம்பர் இறுதியில் மக்கள் பல நாட்களை விடுமுறையில் கழித்த நிலையில் பலரும் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பினர், இது போன்ற காரணங்களால் நாட்டில் பயணங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்தன. இதனிடையே எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலைசிஸ் செல் வெளியிட்டுள்ள தற்காலிக விற்பனைத் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜனவரி வரையிலான காலக்கட்டத்தை கடந்த நிதியாண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை சுமார் 6.1% அதிகரித்துள்ளது.
அதே போலவே நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜனவரி வரையிலான காலகட்டத்தில், கடந்த நிதியாண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியா முழுவதும் டீசல் விற்பனை year-on-year விற்பனையானது 4.3% வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற அரசுக்குச் சொந்தமான ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெட்ரோலை 8% அதிகமாகவும், டீசலை 1.8% குறைவாகவும் விற்பனை செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இந்த பிரிவில் உள்ள தனியார் துறை பங்குதாரர்களுக்கான சந்தைப் பங்கின் வளர்ச்சியை குறிப்பதாக கூறப்படுகிறது.
எப்போதுமே இந்தியாவில் பெட்ரோலின் தேவையும் விற்பனையும் ஏறக்குறைய முற்றிலும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் மொபிலிட்டி துறையைச் சார்ந்தே உள்ளது. இந்தியாவின் மொத்த பெட்ரோல் விற்பனையில் கிட்டத்தட்ட 60% டூ-வீலர்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி நாட்டில் தனிநபர் நடமாட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதும், இந்திய சாலைகளில் அதிகரித்து வரும் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனையின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.
அதே போல முக்கியமாக டீசல் பெரும்பாலும் நீண்ட தூர போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பண்டிகைக் காலத்தின் போது வலுவாக இருக்கும் டீசல் விற்பனையானது குளிர் காலத்தில் மந்தமாகவே இருக்கும். எனினும் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் நாடு முழுவதும் டீசல் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது.