IND vs ENG வர்ணணையில் இருந்த கவாஸ்கர்.. 2வது அம்மா தொடர்பாக திடீரென்று வந்த செய்தி..சோகத்தில் விலகல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் சுனில் கவாஸ்கர்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கிய கவாஸ்கர், அவருடைய காலத்தில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையின் படைத்திருந்தார்.
கேப்டன் தொடக்க வீரர் என பல புகழைப் பெற்ற கவாஸ்கரை அப்போதைய ரசிகர்கள் லிட்டில் மாஸ்டர் என்று அழைப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் வேகபந்து வீச்சு படையை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காலத்தில் தன்னுடைய அறிமுகத் தொடரிலே 700 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் சாதனை படைத்தார்.
74 வயதிலும் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது வழக்கம் போல் கவாஸ்கர் வர்ணனை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று கவாஸ்கர் குடும்பத்தில் அவர் தன்னுடைய இரண்டாவது தாய் என்று போற்றும் அவருடைய மாமியார் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இதனால் பதறிப்போன கவாஸ்கர் திடீரென்று போட்டியிலிருந்து விலகி நேரடியாக கான்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
கான்பூரை சேர்ந்த மார்ஷ்நெயில் என்ற பெண்ணை கவாஸ்கர் 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கவாஸ்கரின் மனைவி கான்பூரில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகளாவார். கவாஸ்கர் ஒருமுறை கிரிக்கெட் ஆடி கொண்டு வந்திருந்த போது அவருடைய மனைவி கவாஸ்கர் இடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கவாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஸ்டார் கிரிக்கெட் வீரராக இருந்த கவாஸ்கர் அவருடைய திருமணத்திற்கு பிறகு மேலும் பல உயரத்தை தொட்டார்.கவாஸ்கரின் மாமியார் அவருக்கு நல்ல உறுதுணையாக இருந்தாராம். கவாஸ்கர் வீட்டில் நிகழ்ந்திருக்கும் இந்த சோகத்திற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.