மனைவியை பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிய ஜேர்மானியர்: பொலிசார் வந்ததும் ஏற்பட்ட முடிவு
ஆஸ்திரியா நாட்டில் வாழும் ஜேர்மானியர் ஒருவர், தன் மனைவியை பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்தனர்.
பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிய ஜேர்மானியர்
நேற்று, ஆஸ்திரியாவின் Burgenland மாகாணத்தில், வீடு ஒன்றில் சண்டை நடப்பதாகவும், ஜேர்மானியர் ஒருவர் தன் மனைவியை பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டுவதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் அங்கு செல்ல, 55 வயது நபர் ஒருவர் தன் மனைவியை பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள்.
கத்தியைக் கீழே போடும்படி பொலிசார் கூறியும் அவர் கேட்காமல் போகவே, அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார்கள் பொலிசார்.
ஆனாலும் கத்தியைக் கீழே போடாத அந்த நபர், பொலிசார் ஒருவரைத் தாக்க, அந்த பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மற்ற பொலிசார் தாக்கிய ஜேர்மானியரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.