சளிப்பிரச்னை நீங்கும்.. காரசாரமான கருப்பு மிளகு சிக்கன் சூப்.. ஈசியா வீட்டிலேயே செய்யலாம்!

மழைக்காலம்,குளிர்காலம் என்று வந்துவிட்டாலே சிலருக்கு சளி தொல்லை ஏற்படுவது இயல்பு.
அந்த சமயங்களில் நமது நாக்கு காரசாரமாக சாப்பிடுவதற்கு விருப்பப்படும்.
அதுவும் குளிர்ச்சியான நேரங்களில் சூப் குடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்க தோன்றும்.
அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டிலேயே எப்படி காரசாரமான கருப்பு மிளகு சிக்கன் சூப் தயார் செய்யலாம் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
கோழி துண்டுகள் – 2 கப்
chicken broth – 4 கப்
நறுக்கிய காய்கறிகள் – 1 கப் (கேரட், செலரி மற்றும் குடைமிளகாய்)
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கோழியை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
கோழி நன்கு வெந்ததும் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி அதை நன்றாக துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கோழி வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் எடுத்து வைத்து அதை சூப் செய்யும் போது சேர்த்துக்கொள்ளலாம்.
பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், செலரி மற்றும் குடைமிளகாயை சேர்த்து மென்மையாகும் வரை வறுக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கியதும் அதனுடன் கோழி துண்டுகள் மற்றும் கோழி வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பிறகு புதிதாக இடித்து வைத்துள்ள கருப்பு மிளகையும் சேர்த்து 15-20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறுது நேரம் கழித்து இறக்கினால் காரசாரமான கருப்பு மிளகு கோழி சூப் ரெடி.