ஆரோக்கியமாக வாழ கிச்சனில் இருக்கும் இந்த 5 பொருட்களை உடனே தூக்கி எறியுங்கள்!!
‘உணவே மருந்து’ என்ற பழமொழிக்கேற்ப, நாம் உண்ணும் உணவு தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ பெரிதும் உதவுகிறது. இந்த ஆரோக்கியம் முதலில் சமையலறையில் இருந்து தான் தொடங்குகிறது. ஏனெனில், அங்கு தான் உணவு சமைக்கப்படுகிறது. சமையலறையை எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம்முடைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்க முடியும். இந்நிலையில் சமையலறையில் சில பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
சர்க்கரை:
சமையலறையில் தவிர்க்க வேண்டிய முக்கியமான பொருள் சர்க்கரை ஏனெனில் அவை உடல் நலத்திற்கு கேடு. அதிலும் குறிப்பாக வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு கெடுதியாகும். சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு உணவையும் காலை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே, இதை கிச்சனில் வைக்காமல் இருப்பது நல்லது என்று கூட சொல்லலாம்.
பதப்படுத்தப்பட்ட பொருட்கள்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பயன்பாடு நல்லதல்ல. இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இன்னும் சிலரோ இவற்றின் எக்ஸ்பீரி டேட் பார்க்காமல் கூட ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். எனவே, இந்த மாதிரியான பொருட்களை கிச்சனில் வைக்காமல் இருப்பது நல்லது.
மயோனைஸ்: தற்போது உலகளவில், இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நீங்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. சிலர் இதை கடையில் வாங்கி வந்து வீட்டில் வைத்து அதிக நாட்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இதை நாம் வீட்டில் தயாரிக்கும் போது கூட நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. எனவே இந்த மாதிரியான அநாகரீகமான பொருட்களை சமையலறையில் இனி வைக்காதீர்கள்.
டீ, காபி: இன்றைய காலங்களில் தூங்கி எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வேலை எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். ஆனால், நம்முடைய தாத்தா, பாட்டி காலங்களில் அவர்கள் காலை எழுந்ததும் கூழ், கஞ்சி, மோர் போன்றவற்றை தான் குடித்து வந்தனர். இதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். எனவே, நீங்களும் அவர்களைப் போல நீண்ட ஆயுளுடன் வாழ, உடனே உங்கள் வீட்டில் இருக்கும் டீ, காபி பவுடரை தூக்கி எறியுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பூஸ்ட், ஹார்லிக்ஸ்: நாம் நம்முடைய பாரம்பரிய முறைகளை மறந்து குழந்தைகளுக்கு காலை எழுந்ததும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை பாலில் கலந்து கொடுக்கிறோம். ஆனால் இது அவர்களின் உடல் நலத்திற்கு கெடுதி! எனவே, உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய முறையில் கூல் கஞ்சி போன்றவற்றை குடிக்க காலையில் குடிக்க கொடுங்கள். அது போல் இரும்பு சத்து நிறைந்த உணவை காலை உணவாக தினமும் கொடுங்கள். மத்தியானத்திற்கு ஏதாவது ஒரு சிட்ரஸ் பல ஜூசை குடிக்க கொடுங்கள்.