கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள்… அயோத்தியில் 8000 போலீசார் குவிப்பு… !

யோத்தியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் காலையில் இருந்து இதுவரை சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதே எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்வதற்காக 8000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் உத்தரப்பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் உள்துறைச் செயலாளர் , சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜி பிரசாந்த் குமார் அனைவரும் ராமர் கோயிலுக்குள் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமபிரானை தரிசிக்க வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்தனர். பின் வரிசையாக பக்தர்களை காவல்துறையினர் கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர்.கூட்டம் அதிகமான காரணத்தால் அங்கு கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பக்தர்களை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்வதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யவில்லை என்கின்றனர் பக்தர்கள்.

இதனையடுத்து அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரிசையில் காத்திருந்தது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிர்வாகமும், போலீசாரும் தற்காலிகமாக நுழைவாயிலை மூடிவிட்டு, கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு, அவ்வழியாக வரும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி பால ராமரை பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று பகல் 11.30 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் ராமரை பக்தர்கள் தரிசிக்கலாம். தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், மீண்டும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *