லிஸ்டை ரெடி பண்ணுங்க.. காங்கிரஸுக்கு சீட்டை குறைக்கும் திமுக.. பறந்து போன மெசேஜ்.. கலங்கிய கதர்கள்
2024 லோக்சபா தேர்தலுக்கான பேச்சுக்களை திமுக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்களை கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை திமுக சமீபத்தில் மேற்கொண்டு உள்ளதாம்.
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருப்பது.. காங்கிரசுக்கு இந்திய கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தேர்தலாக மாறி உள்ளது. அதோடு இல்லாமல்.. காங்கிரசுக்கு தான் பெரிய தேசிய கட்சி என்று இருக்கும் மிதப்பை உடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரிய பாடத்தை, மிகப்பெரிய அளவில் தன்னடக்கத்தையும் கூட கொடுக்கும்.
அதோடு இல்லாமல் கூட்டணி கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை காங்கிரசுக்கு இது கொடுக்கும். மாநிலங்களில் வலிமை இன்றி காணப்படும் காங்கிரஸ்.. மாநில கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
திமுகவிற்கு கூட்டணி ரீதியாக கூடுதல் பவரை கொடுக்கும். திமுக கொடுக்கும் இடங்கள்தான் இறுதி, அவர்கள் வைப்பதே கூட்டணியில் சட்டம். காங்கிரஸ் நினைத்த இடங்களை கேட்டு வாங்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும்.
எத்தனை இடங்கள்: 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.
திமுக திட்டம் என்ன?: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 – 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடங்கிய பணிகள்: நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் – திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி உள்ளது.
அதன் ஒரு கட்டமாக சமீபத்தில் காங்கிரசை சேர்ந்த டாப் தலை ஒருவரை திமுக மூத்த எம்பி ஒருவர் சந்தித்து இந்த தகவலை தெரிவித்து உள்ளாராம். 5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறாராம்.