உடனே இந்த வேலைய முடிங்க! மார்ச் 14ஆம் தேதி தான் கடைசி..!

இந்தியாவில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் மொபைல் சிம் கார்டு முதல் பேங்க் வங்கி கணக்கு என எதையும் செய்ய முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதார் கார்டு தற்போது கட்டாயமாகிவிட்டது. இந்த ஆதார் கார்டு அறிமுகமாகி 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
எனவே பத்து ஆண்டுகள் 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுத்தவர்கள் தனி நபர் விவரங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அப்படி திருத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14. அதை தாண்டி அப்டேட் செய்பவர்கள் கட்டணத்தை பல மடங்காக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.