நெய் மணமணக்கும் வெண் பொங்கல்: எப்படி ஈசியா செய்யலாம்?
தென்னிந்தியாவில் பிரபலமான பொங்கல் பண்டிகை அல்லது பிற இந்து பண்டிகைகளின் போது தயாரிக்கப்படுகிறது மற்றும் தெய்வங்களுக்கு நைவேத்தியமாக வைக்கப்படுகிறது.
காரமான பொங்கலானது, வெண் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
சீரகம், சாதத்தை கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றின் அற்புதமான சுவைகளுடன் வெண் பொங்கலை செய்யலாம்.
இதில் நெய்யின் இனிமையான நறுமணமானது மிக்கியமானதாகும். எனவே இதை எப்படி ஈசியாக நெய் மணக்க மணக்க செய்யலாம் என பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 2 கப்
- பாசி பருப்பு – 3/4 கப்
- மிளகு – 2 டீஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
- நெய் – 4 டீஸ்பூன்
- சீரகம் – 3 டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு
- பெருங்காய தூள் – 4 சிட்டிகை
- முந்திரி பருப்பு – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசியை 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து, அதில் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் சீரகம், உப்பு சேர்த்து 40 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.