சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் நெய்… தினமும் தடவினாலே போதும்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும். அதற்காக தேங்காய் எண்ணெய் முதல் நெய் வரை சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களை வைத்தும் முகத்தை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்புவது வழக்கம்.
அந்தவகையில் அனைத்து வீடுகளில் இருக்கும் நெய் வைத்து, எப்படி இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நெய்யின் ஊட்டச்சத்து
பசுவின் பாலில் இருந்து பெறப்படும் தேசி நெய், குறிப்பாக சருமத்திற்கு நன்மை பயக்கும். வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அதன் கலவையானது ஒளிரும் நிறத்திற்கு இயற்கையான அமுதமாக அமைகிறது.
வறண்ட சருமத்தால் இருகின்றீர்கள் என்றால், ஒரு துளி நெய் எடுத்து முகத்தில் , கை , கால்களில் தடவி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
முகத்தில் அதிக சுருக்கம் இருந்தால் கட்டாயம் நெய் பூசவும்.
குளிப்பதற்கு முன் குளிக்கும் ஷாம்புவுடன் 10 சொட்டு நெய் கலந்து, கை கால்களில் கலந்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் நல்லது.
சருமம் பொழிவிழந்து இருந்தால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பளிச்சிடும்.
கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.
தினமும் உதட்டிற்கு நெய் தடவினால் வறட்சி நீங்குவதோடு மட்டுமன்றி சிவப்பான உதடும் கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம்.
நெய்யில் உள்ள வளமான சத்துக்கள் சருமத்தை ஆழமாக வளர்த்து, மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது. முகத்தில் நெய்யை தவறாமல் தடவுவது வறட்சியை எதிர்த்து, சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும்.