இஞ்சி பூண்டு பேஸ்ட் ரொம்ப நாள் கெட்டுப் போகாமல் இருக்கணுமா.? இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க.!
வீடுகளில் அன்றாடம் செய்யக்கூடிய விஷயங்களில் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வதன் மூலம் அந்தக் குறிப்புகள் நமக்கு பல வகைகளிலும் உதவலாம். அதுபோன்ற சில சமையலறை டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பெரும்பாலும் அசைவ உணவுகள் தயாரிப்பில் முக்கியமாக பயன்படுத்தப்படுவது இஞ்சி பூண்டு பேஸ்ட். நாம் அனைவரும் இதனை அரைத்து பிரிட்ஜில் வைத்திருப்போம். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றை அரைக்கும் போது தண்ணீர் விட்டு அரைக்க கூடாது.
இஞ்சி பூண்டுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அரைக்க வேண்டும். மேலும் சிறிதளவு உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்தால் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இவற்றைத் திறந்த பாத்திரங்களில் வைக்காமல் மூடி போட்ட கண்ணாடி பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். இதன் மூலமும் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை பழ ஊறுகாய் தயாரிக்கும் போது அவற்றுடன் சிறிதளவு சர்க்கரை இந்துப்பு ஓமம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக குலுக்கி வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவை அதிகமாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.