Ginger Halwa : உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் இஞ்சி அல்வா!
தேவையான பொருட்கள்
இஞ்சி – அரை கிலோ
பாதாம் – அரை கப்
உலர் திராட்சைகள் – 20
வால்நட்கள் – கால் கப்
முந்திரி – கால் கப்
வெல்லம் – ஒரு கப்
நெய் – கால் கப்
செய்முறை
முதலில் இஞ்சியின் தோல் சீவி அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக அலசிவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக முந்திர், வால்நட்கள் மற்றும் பாதாம் என அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதையும் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை பொடியாக அரைக்கக் கூடாது. ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை சூடாக்கி, அதில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூடானதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இதை 15 நிமிடங்களுக்கு கிளறவேண்டும்.
இப்போது வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். நன்றாக வெல்லம் உருகியவுடன், பொடித்த நட்ஸ்கள், திராட்சை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அல்வா பதம் வரும் வரை அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
சூடான சுவையான இஞ்சி அல்வா சாப்பிட தயாராகிவிட்டது. இதில் நட்ஸ் தூவி சாப்பிடலாம்.
அல்வா கெட்டியாக வரவேண்டுமெனில் இதனுடன் மாவா வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
இஞ்சியின் நன்மைகள்
குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கும்
காலை நேர சோர்வை போக்கும்.
இஞ்சியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி, வடிகட்டி, தேன் கலந்து பருகினால், செரிமான பிரச்னைகள் நீங்கும்.
செரிமான மண்டலம் சுத்தமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை போக்க உதவும்.
வயோதிகத்தை தடுக்க உதவுகிறது.
மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு உதவுகிறது.