இஞ்சி, தேன்: குளிர் காலத்தில் இருமலைப் போக்க ஹோம்மேட் காஃப் டிராப்ஸ்- செஃப் வீடியோ
இஞ்சி, அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன், சுவாச அசவுகரியத்திற்கு எதிராக போராடுகிறது. அதே நேரத்தில், தேன் தொண்டை எரிச்சலைப் போக்க உதவுகிறது
குளிர் காலம் தொடங்கும் போது, மூக்கடைப்பு தொண்டை வலி மற்றும் தொடர் இருமல் போன்ற சீசன்களும் வரும். ஆனால் உங்களுக்கு உதவக்கூடிய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
அதில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வுகளில் ஒன்று இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் உன்னதமான கலவையாகும்.
இஞ்சி, அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன், சுவாச அசவுகரியத்திற்கு எதிராக போராடுகிறது. அதே நேரத்தில், தேன் தொண்டை எரிச்சலைப் போக்க உதவுகிறது, மேலும் எலுமிச்சையின் வைட்டமின் சி உள்ளடக்கம் வீக்கத்தைக் குறைப்பதற்கும் நோயெதிர்ப்பு ஆதரவிற்கும் பங்களிக்கிறது.
கடையில் வாங்கும் இருமல் சிரப் மருந்துகளுக்கு இயற்கையான மாற்றாக, செஃப் பங்கஜ் பதூரியா தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சைத் துளிகளுடன் விரைவான மற்றும் சுவையான தீர்வை வழங்குகிறார். இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் உட்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
50 கிராம் இஞ்சி
1 எலுமிச்சை
1/2 கப் சர்க்கரை
தேன் 2 டீஸ்பூன்
செய்முறை
இஞ்சியை நன்றாக துருவி, ஒரு சல்லடை மூலம் அதன் சாற்றைப் பிழியவும்.
எலுமிச்சையை பாதியாக வெட்டவும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து, அதிக தீயில் சர்க்கரை உருகும் வரை அல்லது கேரமலைஸ் ஆகும் வரை சமைக்கவும்.
அடுப்பை அணைத்து, இஞ்சி சாறு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை வாணலியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை எண்ணெய் தடவிய தட்டில் வட்ட வட்டமாக சாக்லேட் போல விடவும். குளிர்ந்து கெட்டியானதும் அவற்றை பிளாஸ்டிக் ரேப்பரில் போர்த்தி சேமித்து, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
உங்கள் இருமல் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். இந்த தீர்வு ஒரு ஆதரவு நடவடிக்கையாக இருந்தாலும், இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை.
புதிய வைத்தியங்களை முயற்சிக்கும் முன், உங்கள் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது, குறிப்பாக உங்களுக்கு அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தால் அல்லது ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால்.