பிளாக் கலர் ட்ரான்ஸ்பரெண்ட் ட்ரெஸ்ஸில் கிளாமர் போஸ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யாவா இது?
பாரதி கண்ணமா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் காவ்யா அறிவுமணி. இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்து வந்த வி.ஜே சித்ரா தற்கொலைக்கு பிறகு யார் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.. ஏற்கனவே வி.ஜே சித்ரா – கதிரவன் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் முல்லையாக நடிக்க தொடங்கிய சில நாட்களிலேயே அந்த ரசிகர்களை ஈர்த்தார் காவ்யா.
குமரன் – காவ்யா ஜோடிக்கும் தனி ரசிக பட்டாளமே உருவானது. முல்லை ரசிகர்களும் காவ்யாவை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது. எனினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவ்யா திடீரென விலகினார். பட வாய்ப்புகள் வருவதால் சீரியலில் இருந்து விலகியதாக அவர் விளக்கமளித்திருந்தார்.
மேலும் மிரள், ரப்பப்பரே போன்ற படங்களிலும் காவ்யா நடித்துள்ளார். தற்போது படங்களில் நடித்து வரும் காவ்யா கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.