Global Warming : 174 ஆண்டுகளில் 2023தான் அதிக வெப்பம் கொண்ட ஆண்டு – உலக வானிலை மைய அதிர்ச்சி!

Global Warming : உலக வானிலை மைய தரவுகளின்படி, கடந்த 174 ஆண்டுகளில் 2023ம் ஆண்டே அதிக வெப்பமிக்க ஆண்டாக இருப்பது தெரியவந்துள்ளது. புவியின் தரை வெப்பம் 1850-1900களில் இருந்த அளவைவிட 1.40 டிகிரி செல்சியஸ் கூடுதல் அல்லது குறைவு 0.12 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.

புவிவெப்பமடைதல் பிரச்னை உலகத்தையே அச்சுறுத்தும் சூழலில், சுற்றுச்சுழலைக் காப்பது அரசின் பிரதான கடமையாக இருந்தும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் அது குறித்து போதிய அக்கறை காட்டவில்லை.

அரசுகள் குடிமக்களை காப்பதற்கு பதில், தொழிற்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் பிரச்னைகளை புறந்தள்ளி, சுற்றுச்சூழலை மாசடையச் செய்தாலும், வணிக நலன்களுக்கு மட்டும் துணைநிற்பது வேதனையே.

வனத் திருத்தச் சட்டம் 2023 ஏற்கனவே இருந்த வன பாதுகாப்புச் சட்டம் 1980ஐ மாற்றி, சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் காடுகள் இருக்கும் பரப்பில், காடுகளுக்கு தொடர்பில்லாத செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரப் பகுதிகளில் மீன் மற்றும் பிற உயிரினங்களின் வளர்ப்பிற்கு, அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு கொண்ட கடற்கரை மேலாண்மை மண்டலப் பகுதியில் (CRZ) அனுமதி கொடுத்து, சுற்றுச் சூழலை பாழாக்கும் சட்டத்திருத்தம் (Coastal Aguaculture Authority (Amendment) Act 2023) கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்லுயிர் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் உள்ளூர் மக்களின் உரிமைகளை The Biological Diversity (Amendment) Act, 2023 மூலம் பறித்து, ஆயுர்வேதம் அல்லது சித்தா அல்லது யுனானி அல்லது ஹோமியோபதி மருந்து நிறுவனங்கள், குறிப்பாக ஆயுர்வேத மருந்து நிறுவனங்களின் வணிக நலன்கள் மட்டுமே மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதிலிருந்து, மக்கள் நலனைக்காட்டிலும், வணிக நலனே மத்திய அரசுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது.

இதனால், 2024ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்புகள் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரங்கேறியுள்ளது. 2008ம் ஆண்டிலேயே திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி செய்த ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்களுக்கு மூளையில் கட்டி பாதிப்பு ஏற்படுவது அதிகமாகவும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கான போராட்டத்தின்போது (2018) 13 உயிர்கள் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டால் பறிக்கப்பட்டது. அப்போதைய திமுக அரசு தவறு செய்த காவலர்கள் மீது அரசு அறிக்கையின் படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.

துப்பாக்கிச்சூடு குறித்து ஆய்வு மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபரில் தற்போதைய திமுக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 27 காவலர்கள் தவறிழைத்தது உறுதிசெய்யப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

அறிக்கையில் அப்போது IGPயாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் தவறிழைத்தவர் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு சிறிது காலத்திலேயே கூடுதல் DGP (AGDP) பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஓராண்டு கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தவறிழைத்த காவல் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் அறிக்கை கேட்ட நிலையில், தற்போதைய திமுக அரசு தவறிழைத்த 27 காவல் அதிகாரிகளில் 21 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறிழைத்த அப்போதைய IGP சைலேஷ்குமார் யாதவ், Deputy IGP கபில்குமார் சரோத்கர், SP மகேந்திரன் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் விசாரணையில் இருப்பதாகக் கூறியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *