ஞானவாபி கட்டிடத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ஞானவாபி மசூதி கட்டப்பட்ட இடத்தில், ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:-

ஞானவாபி கட்டிடத்தில் தொல்லியல் நிபுணர்கள் குழு சேகரித்த ஆதாரங்கள், கோயிலை இடித்து அங்கு மசூதி கட்டப்பட்டதை உறுதி செய்கிறது.எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 பிரிவு 4-ன்படி, இந்தக் கட்டிடத்தை இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும்.

இரு சமூகத்தினரிடையே நல்லிணக்க உறவைப் பேண, காசி விஸ்வநாதரின் இடத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்க பள்ளிவாசல் நிர்வாகக் குழு முன்வர வேண்டும் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *