கோலி – ரவி சாஸ்திரி செய்த ட்ரிக்.. ஆப்பு வைத்த ரோஹித் சர்மா… இந்திய டெஸ்ட் அணி சோலி முடிந்தது
மும்பை : விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி கையில் இந்திய டெஸ்ட் அணி இருந்த போது, அணியின் எதிர்கால வளர்ச்சிக்காக அவர்கள் செய்த ஒரு விஷயத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா செய்யத் தவறி விட்டார்.
சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி ஆகியோர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களாக சில சாதனைகளையும், பல மோசமான தோல்விகளையும் சந்தித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இவர்கள் மூவருமே குறைவான வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
ஆனால், விராட் கோலி கேப்டனாக வந்த பின், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து அணியைக் கட்டமைப்பதில் பல புதுமைகளை செய்தார். ஆனால், தொடர்ந்து அணியை மாற்றுவதாக அவர்கள் மீது புகார் எழுந்தது. ஆனால், அணியை மாற்றிக் கொண்டே இருந்த போதும் சில நல்ல வீரர்களை அடையாளம் கண்டனர்.
பின்னர் 2021 துவக்கத்தில் விராட் கோலி, டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பின் இந்திய டெஸ்ட் அணியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேகப் பந்துவீச்சாளரும் அறிமுகம் ஆகாமல் இருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். தற்போது பிரசித் கிருஷ்ணா தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி உள்ளார். இவர்கள் இருவருமே தற்போது ஆளுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் அடி உள்ளனர்.