யுவன் கொடுத்த GOAT அப்டேட்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டைம் ட்ராவல் பற்றிய கதை என்பதால் படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு இருக்கிறது. படத்தின் இறுதி கட்ட சூட்டிங் பணிகளை செய்து வருவதாக வெங்கட் பிரபு கூறி இருந்தார்.
கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் கேரளாவில் ஷூட்டிங் செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
GOAT படத்தில் பாடிய விஜய்
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வழக்கமாக தனது படங்களில் விஜய் ஒரு பாடலை சொந்த குரலில் பாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவை பெரிய ஹிட் ஆகி ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக மாறிவிடுகின்றன.
https://twitter.com/ArunVJ_VFC_/status/1766497817995202791