GOAT: விஜய், இளையராஜா குரல்களில் இசை மழை… GOAT படத்தில் யுவன் மேஜிக்… இது லிஸ்ட்லயே இல்லையே!
விஜய்யின் தளபதி 68 டைட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் சுருக்கமாக GOAT என்ற டைட்டிலில் தளபதி 68 பட அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யும் இளையராஜாவும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளது தான் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
தளபதி, இசைஞானி குரல்களில் GOAT இசை மழை
விஜய்யின் தளபதி 68 பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகின. அதன்படி, இந்தப் படத்திற்கு The Greatest of All Time – GOAT என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் GOAT வெங்கட் பிரபுவின் மேஜிக்கல் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிக்கும் GOAT படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
GOAT படத்தில் விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், இசையில் யுவனுடன் தமனும் ப்ரோகிராமராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இக்கூட்டணியில் அடுத்தக்கட்டமாக இளையராஜாவும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. அதாவது GOAT படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளாராம்.
முக்கியமாக இந்தப் பாடலை விஜய்யும் இளையராஜாவுடன் இணைந்து பாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், விஜய், இளையராஜா இணைந்து பாடிய பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளாராம். இளையராஜா, யுவன், கங்கை அமரன், வெங்கட் பிரபு மொத்த குடும்பமும் விஜய்க்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ஆரம்ப கால சினிமா கேரியரில் இளையராஜா அவரது பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜாவும் விஜய்க்காக இதற்கு முன்பு குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜா இசையில் ‘ஓ பேபி’ என்ற பாடலை பாடியிருந்தார் விஜய். இப்போது GOAT படத்திற்காக இருவருமே ஒரு பாடலை பாடியுள்ளனர். விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதால், அப்பா விஜய்க்காக இளையராஜா குரல் கொடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் GOAT கமர்சியல் சினிமாவாக மட்டும் இல்லாமல் இசையிலும் செம்ம வெரைட்டியாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் கம்போஸிங்கை முடித்துவிட்ட யுவன், விஜய், இளையராஜா பாடியுள்ள பாடலையும் ரெக்கார்ட் செய்துவிட்டாராம். இதனால் முதலில் குத்து பாடல், இரண்டாவது விஜய், இளையராஜா இணைந்து பாடிய மெலடி பாடல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.