ரூ.1,056 கோடிக்கு தங்க நகை… 1900-களிலேயே 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்… இந்தியாவின் பணக்காரராக இருந்தவர் இவர்தான்!
இன்று இந்தியாவில் உள்ள பணக்காரர்களைப் பற்றி விவாதிக்கும்போது, பலரது பெயர்களை குறிப்பிடலாம். ஆனால், எப்பொழுதும் பணக்கார இந்தியர் யார் என்ற கேள்விக்கான பதில், 1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் என குறிப்பிட முடியும்.
மிர் உஸ்மான் அலி கானின் நிகர மதிப்பு, ரூ. 17.47 லட்சம் கோடி (230 பில்லியன் டாலர் அல்லது ரூ. 1,74,79,55,15,00,000.00) – கிட்டத்தட்ட உலகின் தற்போதைய நிகர மதிப்புக்கு இணையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போதைய நிலைக்கு உலகின் பணக்கார தனிநபர், பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பத்தின் மதிப்பு 221 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரது ஆட்சியின் போது, 18ஆம் நூற்றாண்டில் முதன்மையான வைர ஆதாரமாக இருந்த கோல்கொண்டா சுரங்கங்கள், ஹைதராபாத் நிஜாம்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தன. உஸ்மானியா பொது மருத்துவமனை, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை நிறுவிய பெருமையும் மிர் உஸ்மான் அலி கானுக்கு உண்டு.
நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், வாழ்க்கையில் மிகச்சிறந்த விஷயங்களில் அசாதாரண ரசனை கொண்டிருந்தார், அது அவரது செழுமையான வாழ்க்கை முறையில் பிரதிபலித்தது. அவரது தனிப்பட்ட கருவூலத்தில் 400 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 4226 கோடி) நகைகளும், 100 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 1056 கோடி) தங்கமும் அடங்கும். அவரது வைரங்களின் சேகரிப்பு அசாதாரணமானது மற்றும் உலகின் மிகவும் பிரபலமான கற்களான தர்யா-இ நூர், நூர்-உல்-ஐன் டயமண்ட், கோஹி-நூர், ஹோப் டயமண்ட், பிரின்சி டயமண்ட், ரீஜண்ட் டயமண்ட் மற்றும் விட்டல்ஸ்பாக் வைரம் போன்றவற்றை உள்ளடக்கியது.
அவரது மிகவும் பிரபலமான நகைகளில் ஒன்று ஜேக்கப் டயமண்ட் ஆகும். மிர் உஸ்மான் அலி கான் தனது பெருந்தன்மைக்கு பெயர் பெற்றவர், மேலும் இளவரசர் பிலிப்புடன் ராணி இரண்டாம் எலிசபெத் திருமணத்தின் போது, அவர் மறைந்த மன்னருக்கு கார்டியர் வைர நெக்லஸ், தலைப்பாகை மற்றும் மலர் ப்ரொச்ச்களுடன் பரிசளித்தார் என்று வோக் நிறுவனம் கூறுகிறது.
மிர் உஸ்மான் அலி கான் தனது விரிவான கார் கலெக்ஷனுக்காக அறியப்பட்டார், 1912-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் கோஸ்ட் உட்பட 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர் வைத்திருந்தார். மிர் உஸ்மான் தனது 13 வயது முதல் ஹைதராபாத்தில் உள்ள கிங் கோத்தி அரண்மனையில் வசித்து வந்தார். பின்னர் 1967-ல் மறைந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்துவின் படி, அரண்மனை ஒரு பெரிய நூலகம் உட்பட மூன்று முக்கிய கட்டிடங்களைக் கொண்ட ஒரு பரந்த சொத்தாக இன்று அறியப்படுகிறது.
மிர் உஸ்மான் தனது ஆட்சிக்காலம் முழுவதும் மின்சாரம், ரயில்வே, சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து தனது மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் ஜாமியா நிஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற பல முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு பங்களித்த ஒரு முன்னோடி ஆவார். ஒரு ஆட்சியாளர் மற்றும் முன்னோடியாக மிர் உஸ்மானின் மரபு அவரது காலத்தில் அவர் கொண்டிருந்த மகத்தான செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் சான்றாகும்.