ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் மக்கள்.!
தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள பெண்கள் தான்.
அவர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான்.
அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5835 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் உயர்ந்து 46680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 77.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.