தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: இதை ஓட்டிய முதல் இந்திய மன்னர் யார் தெரியுமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா 1982ம் ஆண்டே சொந்தமாக வைத்திருந்தார் என்பதை நம்ப முடிகிறதா?

இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ்
உலகின் ஆடம்பர கார் விற்பனையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரை சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சிலரால் மட்டுமே வாங்க முடியும், ஏனென்றால் அதன் விலை அவ்வளவு அதிகம்.

தன்னுடைய நிறுவனத்தின் அந்தஸ்து மற்றும் தரத்தை குறைத்து கொள்ள கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தரத்தில் சமரசம் செய்யக்கூடிய விலை குறைந்த காரில் தயாரிக்க கூடாது என்ற விதியை கடந்த 100 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது.

அப்படி இருக்கையில், 1892ம் ஆண்டிலேயே பாட்டியாலா பகுதி மகாராஜா இந்தியாவின் முதல் மோட்டார் காரை ஆர்டர் செய்து அந்த காரின் நம்பராக 0 என எழுதினார்.

டி டியான்-பூட்டன் என்ற பிரெஞ்சு மோட்டார் காரான இது, வரலாற்றில் 0 என்ற பதிவு எண் நம்பர் பிளேட்டை கொண்ட முதல் கார் இது என்ற பெருமையும் பெற்றது.

பாட்டியாலா மகாராஜாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரை தொடர்ந்து, இந்திய மன்னர்கள் பலருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மீது விருப்பம் அதிகரித்தது.

தங்கம் மற்றும் வெள்ளியால் ஜொலித்த கார்
பாட்டியாலா மகாராஜா ஆர்டர் செய்த இந்த கார் முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வெள்ளியால் தயாரிக்கப்பட்டு இருந்தது(Gold Rolls Royce Car). இதன் ஸ்டீயரிங் விலை உயர்ந்த யானை தந்தத்தால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

மகாராஜா இந்த காரை தன்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், பிற மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் திருமணங்களுக்கும் கடனாக அனுப்பி வைத்தார். தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த காருடன் சேர்த்து, வேட்டைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரையும் மகாராஜா வாங்கினார்.

இந்த காரில் தான் மவுண்ட்பேட்டன் பிரபுவை மகாராஜா வேட்டைக்காக அழைத்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளை தாங்கிய இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், சுமார் 70 மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *