நடிப்புக்கு நயன்தாரா விரைவில் Good Bye? முழுநேர தொழில்முனைவோர் அவதாரம்! என்ன பின்னணி?
சென்னை: நடிகை நயன்தாரா அறிமுகப்படுத்திய Femi 9 சானிட்டரி நாப்கின் மற்றும் 9 ஸ்கின் என்ற 2 பிராண்டுகளும் எதிர்பார்த்தடை விட வியாபாரத்தில் சக்கை போடு போடுவதால், நயன்தாரா விரைவில் முழுநேர தொழில்முனைவோர் அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் வலம் வரும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஆனாலும் இன்றும் அவர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இந்தச் சூழலில் நயன் ஸ்கின் என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நயன்தாரா, அதில் கிடைத்த வரவேற்பும், ஊக்கமும் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் Femi 9 என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் அறிமுகம் செய்தார்.
இது இப்போது நாடு முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 150க்கும் மேற்பட்ட சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களையும் கொண்டுள்ளதாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதனிடையே இன்னும் இதனை இண்டர்நேஷனல் பிராண்டாக மாற்றும் முயற்சிகளிலும் நடிகை நயன்தாரா ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்தச் சூழலில் தான் Femi 9 வெற்றிவிழாவை சென்னையில் நடத்தியுள்ள நடிகை நயன்தாரா, தொழிலில் எந்தளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை விநியோகஸ்தர்களையும், ஸ்டாக்கிஸ்ட்களையும் வைத்தே பேச வைத்திருக்கிறார்.
நடிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்ற வகையில் நயன்தாரா தொடங்கிய இந்த 2 நிறுவனங்களும் இப்போது ஓரளவு மக்கள் மத்தியில் பரிச்சயம் பெறத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா ஷூட்டிங் உள்ளிட்ட பணிகளில் பிஸியாக இருந்தாலும் டாக்டர் கோமதி என்பவர் நயன்தாராவுக்காக இந்த நிறுவனங்களை முழுநேரமாக கவனித்துக் கொள்வதோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.