நல்ல வட்டி.. பாதுகாப்பான முதலீடு.. முதியோர்களுக்கான FD குறித்த விவரங்கள்!
வயதான காலத்தில் ஃபிக்சட் டெபாசிட் மூலமாக கிடைக்கப்பெறும் வட்டி சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கியமான வருமானமாக அமைகிறது. ஃபிக்சட் டெபாசிட் மீதான வட்டி அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் சீனியர் சிட்டிசன்கள் அதிக பலன்களை பெறுகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பல தனியார் வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. மூன்று வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு சீனியர் சிட்டிசன்கள் 8.1 சதவீதம் வரையிலான வட்டியை பெற்று வருகிறார்கள். இந்த வட்டியானது 2 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கொடுக்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 8.1% வரையிலான வட்டி வழங்கக்கூடிய சில தனியார் வங்கிகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
1- DCB வங்கி சீனியர் சிட்டிசன் FD விகிதங்கள்:
DCB வங்கியானது சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 8.1 சதவீத வட்டியை வழங்குகிறது.
26 மாதங்கள் முதல் 37 மாதங்கள் வரையிலான மெச்சூரிட்டி காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது. இப்படி பார்க்கும் பொழுது ஃபிக்சட் டெபாசிட்டில் இருக்கக்கூடிய அவர்களது பணம் 8.8 வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
2- RBL வங்கி சீனியர் சிட்டிசன் FD விகிதங்கள்:
RBL வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 8 சதவீத வட்டியை ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கொடுக்கின்றது.
24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களில் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த வட்டி கொடுக்கப்படுகிறது. RBL வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் தொகை இரட்டிப்பாக மாறுவதற்கு 9 வருடங்கள் எடுக்கும்.
3- IndusInd வங்கி சீனியர் சிட்டிசன் FD விகிதங்கள்:
IndusInd வங்கி சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 8% வட்டியை கொடுத்து வருகிறது.
33 முதல் 39 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி கிடைக்கும். IndusInd வங்கியில் சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்யும் நபர்களின் பணம் 9 வருடங்களில் இரட்டிப்பாகும்.
4- IDFC வங்கி சீனியர் சிட்டிசன் FD விகிதங்கள்
IDFC வங்கி சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.75% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டி 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஃபிக்சட் டெபாசிட்டில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் 9.2 வருடங்களில் உங்களது ஃபிக்சட் டெபாசிட் தொகை இரட்டிப்பாகும்.
5- ICICI வங்கி சீனியர் சிட்டிசன் FD விகிதங்கள்
ICICI வங்கியில் சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்தால் 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வட்டியானது 2 வருடங்கள், 1 நாள் முதல் 3 வருடங்கள் வரையிலான மெச்சூரிட்டி காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வகையில் உங்களது ஃபிக்சட் டெபாசிட் தொகை 9.6 வருடங்களில் இரட்டிப்பாகும்.