குட் நியூஸ்..! விரைவில் சென்னைக்கு வருகிறது 500 தாழ்தள மின்சார பேருந்துகள்!
அரசு சார்பில் சென்னையில் மின்சாரப்பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் தாழ்தளப்பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 400 தாழ்தளப்பேருந்துகளும், 100 ஏசி வசதியுடன் கூடிய தாழ்தள மின்சாரப்பேருந்துகள் பேருந்துகளை பராமரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தபேருந்துகள் அனைத்தும் வாங்கப்பட்டால் வயதான முதியவர்கள் பேருந்துகளில் எளிதில் ஏற வசதியாக இருக்கும். மக்கள் அனைவரும் எப்போது இந்த மின்சாரப்பேருந்துகள் செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.