குட் நியூஸ்..! விரைவில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க முடிவு..?
திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழக தேங்காய் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இது தொடர்பான எந்தவித தகவல்களும் மற்றும் திட்டம் குறித்தான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் அரசுக்கு எதிராக புகார்களை அனுப்பினார்கள்.
வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாமாயிலை விநியோகிப்பதை தவிர்த்து தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.