குட் நியூஸ்..! மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் இடமாற்ற கட்டணம் அதிரடி குறைப்பு..!

தமிழக மின்வாரியம், கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. பொதுமக்கள், தங்களின் வீடு அருகில் உள்ள மின் சாதனங்களை அகற்ற, மின் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்காக ஏற்படும் மொத்த செலவும் மதிப்பிடப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் சாதனைகளை மாற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரை பரிசீலனை செய்த அரச முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரியம் விடுத்த செய்திக்குறிப்பு :

மக்கள், தங்கள் நிலம் மற்றும் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பி, மின் வழித்தடம், டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக் கோரி விண்ணப்பிக்கும் போது,மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக (Establishment and Supervision Charges) செலுத்த வேண்டி இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி, 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை (Establishment and Supervision Charges) கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு வாரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள்” என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *