ஜியோ ஏர்ஃபைபர் யூசர்களுக்கு குட் நியூஸ்…சூப்பர் ஆஃபர் வழங்கும் நிறுவனம்..
கடந்த சில மாதங்களாகவே ஜியோ நிறுவனம் அதன் ஏர்ஃபைபர் சேவையை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வயர்லெஸ் இன்டர்நெட் சேவை 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இன்டர்நெட்டை யூசர்களுக்கு வழங்குகிறது. ஜியோ ஏர்ஃபைபர் மூலமாக 1 Gbps வரையிலான இன்டர்நெட் வேகத்தை பெற முடியும். இது வழக்கமான ஃபைபர் ஆப்டிக் இணைப்புகளை காட்டிலும் அதிவேகமானது. 1.5 Gbps வரை வேகம் வழங்கக்கூடிய இந்த சேவையானது வீடுகள் மற்றும் அலுவலக பயன்பாடு ஆகிய இரண்டிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைப்பதால் ஜியோ நிறுவனம் இந்த சேவைக்கான திட்டங்களை வேகம் மற்றும் கூடுதல் பலன்களின் அடிப்படையில் விரிவாக்கம் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டேட்டா பூஸ்டர் பிளான். யூஸர்கள் தங்களது தினசரி டேட்டாவை பயன்படுத்தி விட்டால் இந்த பிளானை பயன்படுத்தி டேட்டா பூஸ்ட் ஃபேர் பாலிசி அடிப்படையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தின் படி, அதன் ஏர்ஃபைபர் யூசர்கள் ஒரு மாதத்திற்கு 1TB வரையிலான ஹை ஸ்பீடு டேட்டாவை பயன்படுத்தலாம். எனினும் இந்த லிமிட்டை அடைந்தவுடன் வேகம் குறைய ஆரம்பிக்கும். யூஸர்களுக்கு பல்வேறு டேட்டா ஆப்ஷன்களை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் 101 ரூபாய் முதல் துவங்கக்கூடிய டேட்டா பூஸ்டர் பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது. 1TB -க்கும் அதிகமான ஹை ஸ்பீட் டேட்டா தேவைப்படும் யூஸர்கள் ஸ்பீடு பூஸ்ட் பெறுவதற்காக இந்த பேக்குகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.
ஜியோ ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் பிளான் விவரங்கள்:
ஜியோ ஏர்ஃபைபர் மூன்று டேட்டா பூஸ்டர் பிளான்களை அடிப்படை பிளானுடன் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்குவதற்காக அறிமுகப்படுத்தி உள்ளது:
ஜியோ ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் 101 ரூபாய் பிளான்:
இந்த பிளான் உங்களது அடிப்படை பிளானின் அதே வேகத்தில் 100GB அதிக டேட்டா வழங்குகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் 251 ரூபாய் பிளான்:
இந்த பிளான் மூலமாக நீங்கள் உங்கள் அடிப்படை பிளானின் இன்டர்நெட் வேகத்தில் கூடுதலாக 500GB அதிக டேட்டா பெற்றுக் கொள்ளலாம்.
ஜியோ ஏர்ஃபைபர் டேட்டா பூஸ்டர் 401 ரூபாய் பிளான்:
இந்த பூஸ்டர் பிளான் மூலமாக உங்கள் அடிப்படை பிளானின் இன்டர்நெட் வேகத்தில் 1000GB டேட்டா டாப் அப் உங்களுக்கு கிடைக்கும்.
இது மாதிரியான டேட்டா பூஸ்டர் பிளான்களுக்கு எந்த ஒரு வேலிடிட்டியும் கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஆக்டிவேட் செய்வதற்கு உங்களிடம் ஒரு பேஸ் பிளான் இருக்க வேண்டும். இவற்றை நீங்கள் ஒரு புதிய ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடனோ அல்லது மன்த்லி பிளானுடனோ பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே பில்லிங் சைக்கிளில் பலமுறை நீங்கள் இந்த டேட்டா பூஸ்டர் பிளான்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம். கூடுதலாக இந்த டேட்டா பூஸ்டர் பிளான்களின் இன்டர்நெட் வேகமானது உங்களது ஜியோ ஏர்ஃபைபர் பேஸ் பிளான் உடன் ஒத்து போகும்.
அன்லிமிடெட் இன்டர்நெட் பிளான்கள் என்று சொல்லி இது மாதிரியான லிமிட் டேட்டாவை ஜியோ மற்றும் பிற தொலை தொடர்பு நிறுவனங்கள் எதற்காக வழங்குகின்றன என்ற கேள்வி இப்பொழுது உங்கள் மனதில் எழலாம். இதற்கு ஃபேர் யூசேஜ் பாலிசி (FUP) என்ற பாலிசி காரணமாக அமைகிறது.
டேட்டா பூஸ்ட் ஃபேர் யூசேஜ் பாலிசி என்றால் என்ன (FUP)?
இந்தியாவில் டேட்டா FUP என்பது உங்களுடைய பிராட்பேண்ட் பிளானில் மாத டேட்டாவை பயன்படுத்தியவுடன் நீங்கள் அணுகக்கூடிய டேட்டாவின் அளவை விவரிக்கிறது. ஒவ்வொரு சேவை வழங்குனர்களும் பல்வேறு FUP -களை அமல்படுத்தி இருப்பார்கள். உங்களது மாத டேட்டாவை நீங்கள் பயன்படுத்தி முடித்தவுடன் ஒரு சில ஆபரேட்டர்கள் இன்டர்நெட் வேகத்தை குறைப்பார்கள், இன்னும் சிலர் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பார்கள் அல்லது ஒரு சிலர் ஜியோ நிறுவனத்தை போல டேட்டா பூஸ்டர் பிளான்களை வழங்குவார்கள்.
FUP இருப்பதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன:
ஒரு சில யூசர்கள் டவுன்லோடிங் அல்லது பெரிய அளவிலான ஃபைல்களை பார்ப்பதற்காக அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்துவதால் அது மற்றவர்களின் இன்டர்நெட் வேகத்தை பாதிக்கலாம். எனவே அனைவருக்கும் தரமான இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்வதற்காக FUP பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ளது.