பயணிகளே செம குட் நியூஸ்..!! அரசுப் பேருந்து கட்டணம் அதிரடி குறைப்பு..!! இனி ஈசியா ஊருக்கு போகலாம்..!!
கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 30ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விமான நிலையத்திற்கு இணையாக அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 2,310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் முதல் கட்டமாக மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அடுத்ததாக பொங்கல் பண்டிகை முதல் அனைத்து அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே கிளாம்பாக்கம் முதல் திருச்சிக்கு 320 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
பேருந்துகள் கோயம்பேடு வரை சென்று வரும் டீசல் செலவு வெகுவாக குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப இந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் சென்னை நகரில் இருந்து இந்தப் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் குறைக்கப்பட்டுள்ள இந்த தொகை அளவிற்கு செலவழித்து டிக்கெட் பெற்றுத்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.