மக்களுக்கு குட் நியூஸ்..! இந்தியாவில் விமான கட்டணம் திடீர் குறைவு..!

ந்தியாவில் விமான எரிபொருளின் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் இண்டிகோ நிறுவனம் எரிபொருளின் கட்டணத்தை உயர்த்தியது.

அதாவது, கிலோ மீட்டரை பொறுத்து ரூ.300 முதல் ரூ.1000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது, 1 முதல் 500 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.300 கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும், 501 முதல் 1000 கி.மீ வரை ரூ.400ம், 1001 முதல் 1500 வரை ரூ.550ம், 1501 முதல் 2500 வரை ரூ.650ம், 2501 முதல் 3500 வரை ரூ.800ம், 3501கிலோமீட்டருக்கு மேலே பயணம் செய்பவர்களுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பயணிகளுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் விமான டிக்கெட் கட்டணம் கிலோமீட்டரை பொறுத்து ரூ.300 முதல் ரூ.1000 வரை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்தது.

மீண்டும் பழையபடி விமான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *