பொது தேர்வு எழுதுபவர்களுக்கு குட் நியூஸ்..! மாணவர்களுக்காக முக்கிய ஏற்பாடு – அரசு அதிரடி!!

தமிழகத்தில் மார்ச் மாத துவக்கத்திலிருந்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. இது போக, தமிழகத்தில் தற்போது கோடை காலமும் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் மின் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் கோடை காலங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் இருக்க பராமரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, அடுத்தடுத்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்க இருக்கும் நிலையில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மின்வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், மின்தடை ஏற்படும் பட்சத்தில் அதனை சரி செய்வதற்கான பணிகளையும் விரைந்து முடிக்க ஏகப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.