குட் நியூஸ்..! பிப்.9ம் தேதி முதல் 1 கிலோ அரிசி ரூ.29..!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசியின் விலை அதிகரித்து வந்த நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதனால் அரிசியின் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த மாதங்களில் அரிசியின் விளைச்சல் உற்பத்தி பாதிப்பு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து அரிசியின் விலை ஆனது உயர்ந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற மானிய விலை அரசு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 க்கு மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலமாக சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படும். இத்திட்டத்தின் தொடக்கத்திற்காக முதல் கட்டத்தில் 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும் பாரத் அரிசி இணையவழி விற்பனை மூலமாகவும் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாரத் அரிசி இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளது என்றும் அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரிசி கையிருப்பு குறித்த தகவல்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சின் வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சு உத்தரவிட்டுள்ளது.