குட் நியூஸ்..! கார் வீடு லோன் வாங்கியவர்களுக்கு நற்செய்தி..!
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இந்நிலையில் வங்கிகளுக்கான குறுகியக் காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை தொடர்ந்து, தற்போதைய ரெப்போ விகிதமான 6.5% மாற்றமின்றி தொடரும் என கூறியுள்ளார்.
இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. தொடர்ந்து, 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் RBI மாற்றம் செய்யவில்லை.