குட் நியூஸ்..! இன்று இந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் மேல்நிலைக் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு இந்த தேர்வின் மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே 6,695 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கான தேர்வினை எழுத இருக்கின்றனர். அந்த வகையில், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 700 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.