குட் நியூஸ்..! இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரம் ராகி மால்ட் ..!
தமிழக அரசு பள்ளி மாணவர் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல் கர்நாடக மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் உப்புமா போன்ற சிற்றுண்டி வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும்.
இந்நிலையில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரம் ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இத்திட்டம் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் ராகி மால்ட் வழங்கும் திட்டம் இன்று (பிப்ரவரி 22) முதல் பயன்பாட்டிற்கு வரும். குறிப்பாக அரசு பள்ளிகளின் தரம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு புதிய விஷயங்களால் மாணவர்கள் ஈர்க்கப்படுவர். ஏற்கனவே சீருடை, காலணி போன்றவை வழங்கி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் ராகி மால்ட் ஒரு சிறிய அம்சம் மட்டுமே. இன்னும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். ஏற்கனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் ஆகியவை நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் ராகி மால்ட் திட்டமும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.