குட் நியூஸ்..! இனி போன்பே ஆப்பில் மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை சேர்க்கலாம்..!

போன்பே ஆப்பில் மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை லிங்க் செய்யும் வசதி கிடைக்கிறது. இதை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் (நீங்கள் போன்பே ஆப்பில் சேர்க்க விரும்பும் வங்கியின்) ஏடிஎம் கார்டோ அல்லது டெபிட் கார்டோ தான்! குறிப்பிட்ட கார்டு ஆனது ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போன்பே ஆப்பில் மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை இணைப்பது எப்படி?

01. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பிள் உள்ள ப்ரொபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும்

02. பின்னர் மெனுவில் இருந்து ஆட் நியூ பேங்க் (Add New Bank) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

03. இப்போது வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுக்கவும்.

04. இப்போது செட் யுபிஐ பின் (Set UPI PIN) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் யுபிஐ பின்-ஐ செட் செய்யவும்

05. இறுதியாக, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி-ஐ உள்ளிட்டு, நீங்கள் தொடங்கிய இந்த செயல்முறையை முடிக்க உங்கள் யுபிஐ பின்-ஐ செட் செய்யவும்; அவவ்ளவு தான்

மேற்கண்ட எளிமையான படிகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் போன்பே ஆப்பில் பல வங்கி கணக்குகளை தடையின்றி இணைக்கலாம். போன்பே ஆப்பில் மட்டுமல்ல.. இரண்டு வங்கி கணக்குகள் உடனும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் ஒரே மாதிரியாக இருந்தால், கூகுள் பே ஆப்பிலும் கூட மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை சேர்க்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *