குட் நியூஸ்..! இனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டே பஸ் வரும் நேரத்தை தெரிந்து கொள்ளலாம்..!
வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் பேருந்து சேவையை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.பெரும்பாலும் பஸ்களின் நேரத்தை நாம் துல்லியமாக கூறமுடியாது. இதற்காக பேருந்து நிலையத்துக்கு வந்து அருகில் உள்ளவர்களிடம் இந்த பஸ் எப்போது வரும் என்று அருகில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரம் முழுவதும் தினமும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என பலரும் பேருந்து சேவையை நம்பியுள்ளனர்.
காலை மற்றும் மாலை போன்ற பீக் நேரங்களில் பேருந்துகள் எப்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் என்றே தெரியாத நிலை இருக்கும். இதனால் பயணிகள் பேருந்து வரும் திசையை நோக்கி பார்த்துக்கொண்டே இருப்பதை பேருந்து நிறுத்தங்களில் தினமும் காண முடியும். நேரம் செல்ல செல்ல பேருந்து எங்கு வருகிறதோ.. சரியான நேரத்தில் வந்துவிடுமா என்றெல்லாம் யோசிக்க தூண்டும்.
இந்நிலையில் இதனை போக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சூப்பர் ஐடியாவை வெளியிட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடுத்து பேருந்து எப்போது வரும் என மக்கள் அறியும் வகையில் டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவியை பொருத்த முடிவு செய்துள்ளனர்.அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னை முழுவதும் அமலுக்கு வரும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.