குட் நியூஸ்..! ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலையில் பார்க்கலாம்..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் வருகிற 22-ந்தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவை உலகமே வியக்கும் வண்ணம் நடத்தும் வகையில், உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. விழாவையொட்டி அயோத்தி நகரில் உள்ள கட்டிடங்கள், வணிக வளாகங்கள் அனைத்திலும் காவி வர்ணங்கள் பூசப்பட்டும், இந்து மத சின்னங்கள் வரையப்பட்டும் உள்ளது. எங்கு பார்த்தாலும் ராமர் படம் இடம் பெற்ற காவி கொடிகள் பறக்கின்றன. மொத்தத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நாடுமுழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9,000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒலிபரப்பப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *