குட் நியூஸ்..! சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்றுடன் விடுமுறை முடிவதால், வெளி மாவட்ட மக்கள் மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.
இந்நிலையில், சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, இன்று கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயில் இன்று இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.நாளை 29-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இரயில். மறுநாள் 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல் கோவையில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு இரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.நாளை 29-ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.