குட் நியூஸ்..! இந்த நிற பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடையில்லை..!
தமிழகத்தில் சாலை ஓரங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிகமாக விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களை சோதனை செய்ததில் அதில் ரோடமைன் பி என்கிற உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிரடியாக செயற்கை ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களை விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி திமுக சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்ரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்ரமணியன், புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது வெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை என்றார்.