குட் நியூஸ்..! திருச்சியை சுற்றி பார்க்கலாம் அதுவும் ஹெலிகாப்டரில்.. எப்படி தெரியுமா ?

திருச்சி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் காவிரி, கொள்ளிடம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச், நர்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவானது, ஜனவரி 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஹெலிகாப்டர் சுற்றூலாவில் ஒரு நபருக்கு 5 ஆயிரத்து 999 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கோவில்கள் தோப்புகள் கொள்ளிடம் காவிரி முக்கிய நிறுவனங்கள் மீது இந்த ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படங்களும் நீங்கள் எடுக்கலாம். இனி ஒருமுறை இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. மேலும் விவரங்களுக்கு 8508098648 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *