குட் நியூஸ்..! விரைவில் தியேட்டரில் டிக்கெட் விலை குறைய போகிறது ?
மக்கள் திரையரங்குகளில் சென்று படம் பார்த்து என்ஜாய் செய்வதை விரும்புகின்றனர். அப்படி இருக்கையில் நாளுக்கு நாள் திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் விலை கொடுத்து படம் பார்க்க தயக்கம் காட்டுகின்றனராம்.
இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் டிக்கெட்டுகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை கட்டணமும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு 100 முதல் 150 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.