கூகுள், மைக்ரோசாப்ட், விப்ரோ லிஸ்ட்டில் இணைந்த சிஸ்கோ.. வந்தது பணிநீக்க செய்தி..!
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். சிஸ்கோ சென்னையில் தனது கருவிகளை உற்பத்தி செய்வதற்காக முக்கியக் கூட்டணிக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில், மோசமான பணிநீக்க அறிவிப்பு அதன் ஊழியர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சிஸ்கோ இந்த வர்த்தக மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கம் மூலம் முக்கிய வளர்ச்சி பகுதிகளில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.
இதேபோல் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என நம்புகிறது. கலிபோர்னியா-வின் சான் ஜோஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் 2023 நிதியாண்டின்படி அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 84900 ஆக உள்ளது. இந்தப் பணிநீக்க சுற்றில் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்னாப்சாட் உட்பட உலகின் பல முன்னணி டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்த நிலையில், இந்தப் பட்டியலில் சிஸ்கோ-வும் இணைந்துள்ளது. பிப்ரவரி 14 அன்று சிஸ்கோ நிறுவனம் தனது நிதியியல் முடிவுகளை வெளியிடத் தயாராகி வரும் வேளையில், இந்தப் பணிநீக்க அறிவிப்பு பெரும் அச்சத்தை அதன் முதலீட்டாளர்களும், ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டுச் சிஸ்கோ பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியான நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் எரிக்சன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டுச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கிய வேளையில் சிஸ்கோ-வும் இதில் இணைந்துள்ளது. இந்த வாரம் சமூகவலைத்தளத் துறையில் 2K கிடஸ்-ன் பிடித்தமான தளமாக இருக்கும் ஸ்னாப்சாட் சேவையின் தாய் நிறுவனமான SNAP INC சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.