இலங்கை கிளிநொச்சியில் அரசு பேருந்து விபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்
இலங்கை கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்து
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சிக்கின.
இந்த வாகன விபத்தானது இன்று அதிகாலை 4 மணி அளவில் அரங்கேறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த வாகன விபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும், 8 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்ததாக அறிவிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுகள் மீது மோதிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்தானது சாலையில் படுத்து இருந்த மாடுகள் மீது மோதி எதிரே வந்த ஹயஸ் ரக வாகனம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.