நாங்கள் ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை : காங்கிரஸ் ..!

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் வென்றால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்து கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு என அடுத்தடுத்து பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மேலும் சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாக்குறுதிகளாவது, 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியல் சாசன திருத்த சட்டம் இயற்றப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனி பட்ஜெட், இன்டியா கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும், இளைஞர்களுக்கான ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச வருவாய் சட்டம் கொண்டுவரப்படும், பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும், விவசாயப் பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *