விரைவில் ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூல்..!
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாகவே பயண தூரத்திற்கு ஏற்ப சுங்கவரி வசூல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமல்படுத்த இருப்பதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் காரணத்தினால் Fastag கார்டு இல்லாதவர்கள் இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியின் மூலமாகவே நேரடியாக வங்கி கணக்கின் மூலமாக பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.