தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்… முக்கிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு!
வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் உள்ளிட்ட நாட்களில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 26ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக, இடம், நேரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகளை ”Namma Grama Sabhai” செயலி மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.