பெரும் சோகம்… அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி… !

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் வசித்து வருபவர் நாசர். இவரது மகன் 21 வயது நசீர். ஆனந்தகிரி பகுதியில் வசித்து வருபவர் காா்த்திக் மகன் கோகுல் . நண்பா்களான இருவரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தனா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக கொடைக்கானல் திரும்பினா்.

இந்நிலையில் நசீா், கோகுல் இருவரும் கோவை கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் சிலருடன் 5 வீடு பகுதியில் உள்ள அருவிக்குச் சென்று குளித்தனா். அங்கு அருவிக்கு அருகேயுள்ள ஆழமான பகுதிக்குச் சென்ற நசீரும், கோகுலும் நீண்ட நேரமாகியும் வரவே இல்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து மாயமான கல்லூரி மாணவா்களைத் தேடும் பணிநேற்று ஜனவரி 17ம் தேதி மீண்டும் தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், சேத்துப்பாறையில் வசித்து வரும் கிராம மக்கள் தேடி வந்த நிலையில் நசீர், கோகுல் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *