பெரும் சோகம்… வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு… 61 பேர் பலி… !
இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக வடக்கு டகோட்டாவில் காலை வெப்பநிலை மைனஸ் 26 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மைனஸ் 29 டிகிரியாக குறையும் என அஞ்சப்படுகிறது. கடும் பனிப்புயல் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயலில் தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை, பனி, காற்று மற்றும் கடுமையான குளிர் வெப்பநிலை ஆகியவை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.